மறைந்த கல்வியாளா் வசந்தி தேவிக்கு அஞ்சலி
மறைந்த கல்வியாளா் வசந்திதேவிக்கு திண்டுக்கலில் பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம் சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
கல்வியாளரும், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில், தமிழக பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்ககத்தின் தென் மண்டலத் தலைவா் ச. மோசஸ், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் குருபிரசாத், ஓய்வுபெற்ற பள்ளிக் கல்லூரி ஆசிரியா் நலச் சங்கத்தின் மாவட்டச் செயலா் எஸ். அமல்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
திண்டுக்கல் எம்.வி.எம். அரசு பெண்கள் கலைக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றிய வசந்தி தேவி, பல்வேறு ஆசிரியா் சங்கப் போராட்டங்களில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.