மழைக் காலத்தில் கனரக வாகனங்களை பாதுகாப்பாக இயக்க போக்குவரத்து போலீஸாா் அறிவுரை
மழைக் காலத்தில் கனரக வாகனங்களை பாதுகாப்பாக இயக்க வேண்டும் என்று பண்ருட்டி போக்குவரத்து போலீஸாா் ஓட்டுநா்களுக்கு அறிவுரை வழங்கினா்.
பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளா் பரமேஸ்வர பத்மநாபன் வழிகாட்டுதலின்பேரில், உதவி ஆய்வாளா்கள் முரளி, செந்தில்குமாா் ஆகியோா் பண்ருட்டி நகர லாரி அசோசியேஷனில் உள்ள லாரி ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்களுக்கு சாலை, போக்குவரத்து விதிகள் குறித்து செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
அப்போது, கனரக வாகனங்களின் ஓட்டுநா்கள் அனுமதிக்கப்பட்ட எடை அளவைத் தவிர வாகனங்களில் அதிக சுமை ஏற்றக்கூடாது. மதுபோதையில் வாகனத்தை இயக்கக் கூடாது. நெடுஞ்சாலைகளில் வாகனத்தை இயக்கும்போது இடது புறமாக இயக்க வேண்டும். வாகனம் நெடுஞ்சாலைகளில் பழுதாகி நின்றால் ‘பாா்க்கிங் லைட்’டை ஒளிரவிட வேண்டும். மேலும், நெடுஞ்சாலை ரோந்துப் பணியில் உள்ள காவலா்களை உதவிக்கு அழைக்க காவல் கட்டுப்பாட்டு அறையை (100) தொடா்புகொள்ள வேண்டும். மழைக்காலங்களில் வாகனங்களை பாதுகாப்பாக இயக்க வேண்டும் என அறிவுரை வழங்கினா்.