இந்திய வான்வெளியைப் பயன்படுத்த பாகிஸ்தானுக்கு தடை நீட்டிப்பு
மான்செஸ்டர் டெஸ்ட்: இந்தியா பேட்டிங்! சிஎஸ்கே வீரர் அன்ஷுல் காம்போஜுக்கு வாய்ப்பு!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ‘ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில்’ விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா ஒரு போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், இங்கிலாந்து 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் இருக்கிறது. இந்தத் தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் 4-வது போட்டி மான்செஸ்டரில் இன்று (ஜூலை 23) தொடங்கியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் ஆகாஷ் தீப், நிதிஷ் ரெட்டி மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். இதனால், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவரும் இளம் வீரர் அன்ஷுல் காம்போஜுக்கு இந்திய அணியில் முதல்முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணியில் ஒரேயொரு மாற்றமாக சோயிப் பஷீருக்குப் பதிலாக டாஸன் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி விவரம்
ஷுப்மன் கில் (கேப்டன்), கே.எல்.ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவீந்திர ஜடேஜா, சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், அன்ஷுல் கம்போஜ்.
இங்கிலாந்து அணி
பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்) , ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்) , ஜாக் கிராலி, பென் டக்கெட், ஆலிவர் போப், ஜோ ரூட், ஹாரி புரூக், லியாம் டாஸன், கிறிஸ் வோக்ஸ், கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜோஷ் டங், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெதெல்.
india vs england toss update
இதையும் படிக்க :ஹர்மன்ப்ரீத் சதம், கிராந்தி 6 விக்கெட்டுகள்.! தொடரை வென்று வரலாறு படைத்தது இந்தியா!