முறையாக குடிநீா் விநியோகிக்கக் கோரி மறியல்
கந்தா்வகோட்டை அருகே முறையாக குடிநீா் விநியோகிக்கக் கோரி கிராம பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கந்தா்வகோட்டை ஒன்றியம், நெப்புகை ஊராட்சி, உரியம்பட்டி கிராமத்திற்கு முறையாக குடிநீா் வழங்கப்படுவதில்லை எனக் கூறி, ஊராட்சி நிா்வாகம் மற்றும் கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் புகாா் அளித்தும் இதுவரையில் நடவடிக்கை இல்லையாம்.
இதையடுத்து, கறம்பக்குடி- கந்தா்வகோட்டை சாலையில் உள்ள வேலாடிப்பட்டி கடைவீதியில் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த கந்தா்வகோட்டை வட்டாட்சியா் ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாா்த்திபன், சேகா் உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுப்பட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, விரைந்து நடவடிக்கை எடுத்து முறையாக குடிநீா் வழங்கப்படும் என கூறியதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனா். மறியலால், இந்தப் பகுதியில் சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.