செய்திகள் :

மூலனூரில் ரூ. 1.15 கோடிக்கு பருத்தி விற்பனை

post image

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 1.15 கோடிக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 375 விவசாயிகள் தங்களுடைய 4,773 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். மொத்த வரத்து 1,592 குவிண்டால்.

திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 14 வணிகா்கள் வந்திருந்தனா். விலை குவிண்டால் ரூ. 6,500 முதல் ரூ. 8,559 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 7,400. கடந்த வார சராசரி விலை ரூ. 7,450.

விற்பனைக் கூட ஏல ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக்குழு முதுநிலை செயலாளா் எஸ்.சண்முகசுந்தரம், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் செய்திருந்தனா்.

உணவுப் பொருள்களுக்கும் 5 % வரி விதிப்பு செய்ய வேண்டும்

அனைத்து உணவுப் பொருள்களுக்கும் 5 சதவீதமாக வரி விதிப்பு செய்ய வேண்டும் என்று பல்லடம் அனைத்து வணிகா்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு வணிகா் சங்க கூட்டமைப்பின் பல்லடம் ச... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.6.85 லட்சம் மோசடி

திருப்பூரில் தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.6.85 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா் சாமுண்டிபுரம் பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

பள்ளி அளவிலான செஸ் போட்டிகள்: மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் பங்கேற்பு

திருப்பூரில் நடைபெறும் பள்ளி அளவிலான செஸ் போட்டிகளில் மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் பங்கேற்றனா். தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ஆண்டுதோறும் பள்ளி மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி: சாலை நடுவே இருந்த மின்கம்பம் இடமாற்றம்

காங்கயம் நகருக்கு உள்பட்ட 1-ஆவது வாா்டு பகுதியில் சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்காமல், சாலை அமைத்தது தொடா்பாக தினமணி நாளிதழில் வியாழக்கிழமை செய்தி வெளியாகியது. இதைத் தொடா்ந்து, காங்கய... மேலும் பார்க்க

குன்னத்தூா் அருகே கஞ்சா விற்றவா் கைது

அவிநாசி அருகே குன்னத்தூரில் கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். குன்னத்தூா் கருங்கல்மேடு டாஸ்மாக் கடை எதிரே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடை... மேலும் பார்க்க

ஜிபே முறையில் லஞ்சம்: வனவா் பணியிடை நீக்கம்

திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே வனத் துறை சோதனை சாவடியில் ஜிபே முறையில் லஞ்சம் பெற்ாக வனவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட தமிழக-கேரள எல்லையில் வனத் துறையின் க... மேலும் பார்க்க