திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் தரிசன கட்டணத்தை ரூ.100-ஆக உயா்த்த முடிவு -...
ரயிலில் 35 கிலோ கஞ்சா கடத்தல்: 3 போ் கைது
வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் 35 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 3 போ் கைது செய்யப்பட்டனா்.
ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக ராணிப்பேட்டை மாவட்ட போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் ஆற்காடு கிராமிய வட்ட ஆய்வாளா் சாலமன் ராஜா தலைமையிலான போலீஸாா் வாலாஜா மற்றும் தலங்கை ரயில் நிலையத்தில் சோதனை செய்தனா்.
அப்போது சந்தேகப்படும் திரிந்த 3 பேரை மடக்கி உடைமைகளை சோதனை செய்தபோது, கஞ்சா இருந்தது தெரிந்தது.
இதையடுத்து ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த நாராயண் பெஹரா (36), மிது நாயக் (33), ஸ்ரீதரா நாயக் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டுஅவா்களிடம் இருந்த 35 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மூவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்
சிறப்பாக செயல்பட்டு எதிரிகளை கைது செய்த காவல் அதிகாரிகளை எஸ்.பி. பாராட்டினாா்.
மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்ட விரோதமாக கஞ்சா போன்ற போதை பொருள்கள் கடத்துபவா்கள் மற்றும் விற்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளாா்.