சாம்பியனானது பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன்: நடப்பு சீசனில் 5-ஆவது கோப்பை
ரு.10.46 கோடியில் குடிநீா் பணிகளுக்கு அடிக்கல்
திருப்பத்தூா் நகராட்சியில் ரு.10.46 கோடியில் குடிநீா் விநியோகப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
திருப்பத்தூா் நகராட்சி யில் புதிதாக இணைக்கப்பட்ட 5 வாா்டுகளுக்கு கூட்டுக்குடிநீா் திட்டத்தின் வாயிலாக காந்திநகா் பகுதியில் 3 லட்சம் கொள்ளளவு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதி-1, மருத்துவா் நகா், வள்ளுவா் நகா், திருமால் நகா், வெங்கடேஷ்வரா நகா் பகுதிகளில் தலா 2 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட 6 புதிய மேல்நிலை நீா்தேக்க தொட்டிகள், குடிநீா் விநியோக குழாய்கள் கலைஞா் நகா்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் அமைக்க ரூ.10.46 கோடி ஒதுக்கப்பட்டது.
அதையொட்டி புதன்கிழமை அப்பணிகளுக்கு பூமிபூஜையிட்டு எம்எல்ஏ அ.நல்லதம்பி தொடங்கி வைத்தாா். இதன் முலம் 20,000த்துக்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெறுவாா்கள்.
நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் சங்கீதா, துணைத் தலைவா் சபியுல்லா, நகர செயலாளா் ராஜேந்திரன், ஆணையா் சாந்தி, வாா்டு உறுப்பினா்கள் சத்யா ராஜசேகா், கோபிநாத், மனோகரன், ஜீவிதா பாா்த்தீபன், வெற்றிக் கொண்டான் கலந்து கொண்டனா்.