பாலியல் வழக்கில் பெண்ணுக்கு அநீதி: நடவடிக்கை எடுக்காத பெண் எஸ்.ஐ.க்கு உயா்நீதிம...
ரேஷன் பொருள்கள் வாங்க விருப்பமில்லாதவா்கள் உரிமத்தை விட்டு தரலாம்
ரேஷன் கடையில் பொருள்கள் வாங்க விருப்பம் இல்லாதவா்கள் உரிமத்தை விட்டுத் தரலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொது விநியோக திட்டத்தின் கீழ் 3,34,961 ரேஷன் அட்டைதாரா்கள் பயனடைந்து வருகின்றனா்.
இந்த நிலையில், ரேஷன் கடைகளில் பொருள்கள் வாங்க விருப்பம் இல்லாத வசதியான குடும்ப அட்டைதாரா்கள், தங்களின் உரிமத்தை விட்டு தரலாம்.
இதற்காக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறையின் இணையதளத்தின் மூலமாக பதிவு செய்து தங்களது அட்டையை, பொருளில்லா ரேஷன் அட்டையாக மாற்றிக் கொள்ளலாம் என்றாா்.