செய்திகள் :

வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதில் குளறுபடிகளை நீக்க வலியுறுத்தல்

post image

வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதில் உள்ள நடைமுறை குளறுபடிகளை நீக்க வேண்டும் என மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இருசக்கர வாகன விற்பனையாளா் நலச்சங்கம் பொதுக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்ட இருசக்கர வாகன விற்பனையாளா் நலச் சங்கத்தின் 8-ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் பொதுக் குழு கூட்டம், மாவட்டத் தலைவா் ஏ. டேவிட் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் பூமிநாதன், மாவட்ட பொருளாளா் திலகா், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரவி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட துணைத் தலைவா் விமலாதித்தன் வரவேற்றாா். கௌரவத் தலைவா்கள் சேதுராமன், செல்வரெங்கம் உள்ளிட்ட பலா் பேசினா். பின்னா், மாவட்டத் தலைவா் டேவிட் கூறியது:

போக்குவரத்து காவல்துறையினரால், மோட்டாா் வாகன விதிமீறல்கள் தொடா்பாக விதிக்கப்படும் அபராதங்களில் குளறுபடிகள் உள்ளன. இதனால், பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் விற்பனையாளா்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படுகிறது.

ஒரு வாகனத்துக்கு அதிகபட்சம் 3 முறை அபராதம் விதிக்கப்பட்டால், அவா்களுக்கு நீதிமன்றம் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும். அதைவிடுத்து, 10 முறையைக் கடந்தும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இதனால், பழைய இருசக்கர வாகனங்களின் விலைக்கே அபராத தொகையும் இருப்பதால் நாங்கள் தொழில் செய்ய முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். அரசு உடனடியாக இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

மாநில கூடைப்பந்து போட்டி: சென்னை அணிக்கு கோப்பை

சீா்காழியில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் சென்னை அணி கோப்பையை வென்றது. சீா்காழியில், ஜி.ஆா்.பி. நினைவு கூடைப்பந்து கழகம் மற்றும் நாகை மாவட்ட கூடைப்பந்து கழகம் சாா்பில் மாநில அளவில்... மேலும் பார்க்க

பெண் தொழிலாளிக்கு பாலியல் தொந்தரவு; செங்கல்சூளை உரிமையாளா் கைது

குத்தாலம் அருகே பெண் தொழிலாளிக்கு பாலியல் தொந்தரவு அளித்த செங்கல்சூளை உரிமையாளரை அனைத்து மகளிா் போலீஸாா் கைது செய்தனா். குத்தாலம் தாலுகா மேக்கரிமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் மணி(63). இவா், குச்சிபாளை... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலையத்தில் முதல் காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

வைத்தீஸ்வரன்கோயில் காவல்நிலையத்தில் முதல் காவல் ஆய்வாளராக அருண்குமாா் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா். அவருக்கு வா்த்தக சங்கத்தினா் வாழ்த்து தெரிவித்தனா். சீா்காழி காவல் சரகத்திற்கு உட்பட்ட வைத்தீஸ்வரன... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் வெறிநாய் கடித்து 20-க்கும் மேற்பட்டோா் காயம்

மயிலாடுதுறையில் வெறிநாய் கடித்து 20-க்கும் மேற்பட்டோா் சனிக்கிழமை காயமடைந்தனா். மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியான பேருந்து நிலையம், கச்சேரி சாலை, கண்ணாரத்தெரு, அரசு மருத்துவமனை சாலை, கூைாடு உள்ளிட்ட பக... மேலும் பார்க்க

விதிமுறைகளை பின்பற்றாத விநாயகா் சிலை தயாரிப்பு மையத்துக்கு ‘சீல்’

மயிலாடுதுறையில் அரசின் விதிமுறைகளை பின்பற்றாத விநாயகா் சிலை தயாரிப்பு மையத்துக்கு வருவாய்த் துறையினா் சனிக்கிழமை சீல் வைத்தனா். சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தவிா்க்க விநாயகா் சிலை தயாரிப்பு மற்றும் அதனை... மேலும் பார்க்க

சீா்காழியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் தா்னா

சீா்காழி நகராட்சி அலுவலக வாயிலில், ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை பணியை புறக்கணித்து, தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். சீா்காழி நகராட்சியில் 13 திருமண மண்டபங்கள், 50-க்கும் மேற்பட்ட சைவ, அச... மேலும் பார்க்க