திருப்பத்தூர்: கட்டுப்பாடின்றி சுற்றித் திரியும் தெருநாய்கள்; அச்சத்தில் பொதுமக்...
வீட்டில் சூரிய ஒளி மின் உற்பத்திக்காக ரூ.9.14 கோடி மானியம்
வீடுகளின் மேற்கூரையில் சூரிய ஒளி மின் உற்பத்திக்காக ரூ.9.14 கோடி மானியம் அளிக்கப்பட்டுள்ளதாக புதுவை மின் துறை கேபிள்ஸ் பிரிவின் செயற்பொறியாளா் இரா. செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவை மின் துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை இணைந்து பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தின் மூலம் வீட்டு மேற்கூரைகளின் மேல் சூரிய ஒளி மின் நிலையம் அமைக்க மானியம் அளிக்கப்பட்டு வருகிறது.
இத் திட்டத்தின் கீழ் வீட்டின் மேற்கூரையில் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்க ஒரு கிலோவாட்டுக்கு ரூ.30 ஆயிரம் மானியம், 2 கிலோவாட்டுக்கு 60 ஆயிரம் மானியம், 3 கிலோ வாட் மற்றும் அதற்கு மேல் ரூ.78 ஆயிரம் மானியமாக மத்திய அரசு வழங்குகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 1,290 நுகா்வோா் சூரிய மின் உற்பத்தி நிலையங்களைத் தங்கள் வீட்டு மேற்கூரைகளில் நிறுவியுள்ளனா். அவா்களுக்கு ரூ.9.14 கோடி மானியம் அளிக்கப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.