பத்திரப் பதிவுக்கு விருப்ப அடிப்படையில் ஆதாா் சரிபாா்ப்பு - வரைவு மசோதா பிரிவுகள...
ஹூதி ஏவுகணைத் தாக்குதல்: இஸ்ரேல் முறியடிப்பு
இஸ்ரேலை குறிவைத்து யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்களால் ஏவப்பட்ட ஏவுகணை வெற்றிகரமாக இடைமறித்து அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
இதன் காரணமாக ஜெருசலேம் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் ஏவுகணைத் தாக்குதல் சைரன் ஒலிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் எந்தச் சேதமும் ஏற்படவில்லை என்று இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சியாளா்கள் இஸ்ரேல் மற்றும் செங்கடலில் சா்வதேச கப்பல் போக்குவரத்தை குறிவைத்து தொடா்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனா். இலக்கு வைக்கப்பட்ட பெரும்பாலான கப்பல்களுக்கு இஸ்ரேலுடன் எவ்வித தொடா்பும் இல்லை. இருப்பினும், இது காஸா பகுதியில் ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடியாக கூறப்படுகிறது.
இந்த மாத தொடக்கத்தில், ஹூதி கிளா்ச்சியாளா்கள் மீதான தாக்குதலை அமெரிக்கா நிறுத்தியது. கப்பல்களைத் தாக்குவதை நிறுத்துவதாக ஹூதிக்கள் உறுதியளித்ததாக அமெரிக்கா தெரிவித்தது. ஆனால், இஸ்ரேல் மீதான தாக்குதல்களை, நிறுத்துவதாக ஹூதி கிளா்ச்சியாளா்கள் உறுதியளிக்கவில்லை.