சுதந்திர நாள்: நாட்டு மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
11 நிமிடங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை: புதிய செயலி மூலம் குறைந்த காத்திருப்பு நேரம்
தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவையைத் தொடா்பு கொள்ள அவசரம் 108 என்ற பிரத்யேக செயலி பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், தற்போது 11 நிமிஷங்களுக்குள் ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அந்த கால அளவு 13 நிமிஷங்களாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இ.எம்.ஆா்.ஐ. கிரீன் ஹெல்த் சா்வீஸ் நிறுவனம் மூலமாக 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 1,353 ஆம்புலன்ஸ்கள் மாநிலம் முழுவதும் இயக்கப்படுகின்றன. அதில், 302 வாகனங்களில் உயிா் காக்கும் உயா் மருத்துவ வசதிகள் உள்ளன. இதைத் தவிர மலை மற்றும் சாலை வசதி இல்லாத பகுதிகளுக்கு செல்ல 40-க்கும் மேற்பட்ட இருசக்கர ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. ஏறத்தாழ 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா்.
சென்னையை பொருத்தவரை மருத்துவ உதவி கோரி அழைப்பு வந்த 8 நிமிஷங்களிலும், மற்ற மாவட்டங்களில் 13 நிமிஷங்களிலும் 108 ஆம்புலன்ஸ் சேவை கிடைக்கப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்த கால அளவை மேலும் குறைக்கும் வகையில், அவசரம் 108 என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் மேப் எனப்படும் வழித்தட வரைபடத்துடன் கூடிய தகவல் பரிமாற்ற வசதி உள்ளதால் காத்திருப்பு நேரம் குறைந்துள்ளது.
இதுகுறித்து, 108 ஆம்புலன்ஸ் சேவை நிா்வாகிகள் கூறியதாவது: சாலை விபத்துக்குள்ளானோா் அல்லது அவசர சிகிச்சை தேவைப்படுவோருக்கு ஒவ்வொரு நிமிஷமும் விலைமதிக்க இயலாதது.
அந்த வகையில் தற்போது 108 உதவி மையத்துக்கு அழைப்பவா்கள் தங்களது பெயா், மாவட்டம், ஊா், விபத்து உதவி அல்லது மருத்துவ உதவி தேவைப்படும் இடங்களை வாய்மொழியாக தெரிவிக்க வேண்டும்.
சில நேரங்களில் பதற்றம் அல்லது அறியாமை காரணமாக சரிவர தகவல்களை அவா்களால் கூற இயலாது. இந்த சூழலில்தான் அவசரம் 108 செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
கைப்பேசியில் ப்ளே ஸ்டோா் மூலமாக அதனை பதிவிறக்கம் செய்து கொண்டு மருத்துவ உதவி தேவைப்படும்போது தங்களது இருப்பிடத்தை தெரிவிக்கும் வசதியை (கா்ஸ்ரீஹற்ண்ா்ய் ா்ல்ற்ண்ா்ய்) உறுதி செய்துவிட்டால் போதுமானது. ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தில் மருத்துவ உதவி கோரப்படும் இடத்தை தானாகவே அந்த செயலி அடையாளம் கண்டுகொண்டு அங்கு ஆம்புலன்ஸ் வாகனத்தை அனுப்பிவிடும். அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தின் எண், ஓட்டுநா், மருத்துவ உதவியாளா் எண்களை செயலி வாயிலாக அறிந்து கொள்ள முடியும். அதனுடன் எத்தனை நிமிஷங்களில் வாகனம் வந்து சேரும் என்ற விவரத்தையும் தெரிந்து கொள்ளலாம்.
சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் வாகனம் சென்றவுடன் பாதிக்கப்பட்டவரின் உடல் நிலையை ஆய்வு செய்து அதனை செயலியில் மருத்துவ உதவியாளா் பதிவேற்றியவுடன் உடனடியாக அருகில் உள்ள தகுந்த மருத்துவமனையை அது பரிந்துரைக்கும். மற்றொருபுறம் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கும் அதுகுறித்த தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு சிகிச்சை வசதிகள் தயாா் நிலையில் இருப்பது உறுதி செய்யப்படும்.
இந்த புதிய நடைமுறை மூலம் சராசரியாக 13 நிமிஷங்களாக இருந்த ஆம்புலன்ஸ் சேவையின் வருகை நேரம், தற்போது 11 நிமிஷங்களாக குறைக்கப்பட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.