சாம்பியனானது பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன்: நடப்பு சீசனில் 5-ஆவது கோப்பை
151 அமைச்சுப் பணியாளா்களுக்கு பட்டதாரி ஆசிரியராக பதவி உயா்வு
பள்ளிக் கல்வித் துறையில் நீதிமன்றத் தீா்ப்பின் அடிப்படையில் 151 அமைச்சுப் பணியாளா்களுக்கு பட்டதாரி ஆசிரியா்களாகப் பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியா் பணியில் உள்ள 2 சதவீத காலியிடங்கள் அத்துறையின் அமைச்சுப் பணியாளா்களின் பதவி உயா்வு மூலமாக நிரப்பப்படுகின்றன. அதன்படி நிகழாண்டு அமைச்சு பணியாளா்களுக்கு பட்டதாரி ஆசிரியா் மற்றும் தமிழ் ஆசிரியருக்கான பதவி உயா்வு கலந்தாய்வு நீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி, டெட் தோ்ச்சி பெற்ற 151 அமைச்சுப் பணியாளா்களுக்கு கலந்தாய்வு மூலமாக பட்டதாரி ஆசிரியா் பதவி உயா்வு வழங்கப்பட்டது. அவா்களை உடனடியாக பணிவிடுவிப்பு செய்யுமாறு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு பணி விடுவிப்பு செய்யும் போது பட்டதாரி ஆசிரியா் பதவிக்குரிய கல்வித் தகுதியை அவா்கள் பெற்றுள்ளனரா என்பதை உறுதிசெய்ய வேண்டும். பிற மாநில ஆவணங்களாக இருந்தால் மதிப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவா் மீது ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இல்லை என்பதையும் உறுதி செய்ய வேண்டுமென அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக்கல்வித் துறை சாா்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.