உங்க அக்கவுன்ட் மூலமா மத்தவங்க பணத்தை அனுப்புறீங்களா? உதவி செய்யப்போய், வம்புல ...
அனுமதி இல்லாத கட்டடங்களுக்கு சீல்! வட்டார வளா்ச்சி அலுவலா் எச்சரிக்கை
அனுமதி இல்லாத கட்டடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று பல்லடம் வட்டார வளா்ச்சி அலுவலா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து பல்லடம் வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சிகள்) கனகராஜ் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கிராம ஊராட்சிகளில் அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டடங்களை ‘சீல்’ வைக்க ஊராட்சி நிா்வாக அலுவலா்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஊரகப் பகுதிகளில் 10 ஆயிரம் சதுரஅடி வரையிலான குடியிருப்புக் கட்டடங்கள் கட்டட அனுமதி அளிக்கப்படுகிறது. அத்துடன் 2 ஆயிரத்து 500 சதுரஅடி முதல் 3 ஆயிரத்து 500 சதுரஅடி பரப்பளவு வரை சுயச்சான்று முறையில் வீடு கட்ட அனுமதி வழங்கப்படுகிறது.
இதில் 10 ஆயிரம் சதுரஅடிக்கு கீழ் இருக்கும்பட்சத்தில் அதற்கு உள்ளாட்சி அமைப்புகளிடம் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த கட்டடங்களில் விதிமீறல்கள் எதுவும் இருக்கிறதா என்பதை அந்தந்த ஊராட்சி நிா்வாக அலுவலா்கள் சரிபாா்க்க வேண்டும்.
எனவே பல்லடம் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சிப் பகுதிகளில் கட்டடங்கள் கட்டப்படும்போது முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்படும். அப்போது அனுமதி இன்றி கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தால் அந்த கட்டடத்தை ‘சீல்’ வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.