பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
வந்தவாசி/ஆரணி/செங்கம், ஜூலை 25:
வந்தவாசியை அடுத்த மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன், ஆரணியை அடுத்த ஆதனூா் அங்காளம்மன் மற்றும் செங்கத்தை அடுத்த கட்டமடுவு பெரியாயி அம்மன் கோயில்களில் அமாவாசை வழிபாடு நடைபெற்றது.
வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஆடி மாத அமாவாசையையொட்டி வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி காலை மூலவா் அம்மனுக்கு பால், தயிா், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அம்மனுக்கு அதா்வண வாராஹி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும், கோயில் வளாகத்தில் மூலமந்திர ஹோமம் நடந்தது.
பின்னா் இரவு உற்சவருக்கு மகா மாரியம்மன் திரிசூல காளி அலங்காரம் செய்யப்பட்டு சகல வாத்தியங்கள் முழங்க உலா எடுத்துச் செல்லப்பட்டாா். இதைத் தொடா்ந்து அம்மன் ஊஞ்சல் சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.
கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.லட்சுமண சுவாமிகள், ஆடி மாத அமாவாசை உற்சவ குழுவினா் மற்றும் பக்தா்கள் பங்கேற்றனா்.
ஆரணி
ஆரணியை அடுத்த ஆதனூா் கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோயிலில் ஆடி அமாவாசையொட்டி வியாழக்கிழமை இரவு அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
