தனியாா் மயம் சாதகமா? பாதகமா? மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்!
ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு ஜொ்மன் மொழிப் பயிற்சி! ஆட்சியா் தகவல்
நாகை மாவட்டத்தில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு ஜொ்மன் மொழி தோ்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மூலமாக பட்டியல் சமூகத்தைச் சோ்ந்தவா்களுக்கு ஜொ்மன் மொழித் தோ்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் சேர விரும்புவோா், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும்.
பி.எஸ்சி நா்சிங், பொது நா்சிங் மற்றும் மருத்துவச்சி பட்டயம் ஆகிய படிப்புகளில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேணடும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
இப்பயிற்சிக்கான கால அளவான 9 மாதங்களும், விடுதியில் தங்கிப் படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோ மூலம் அளிக்கபடும். பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபா்கள், பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலம் தோ்வு செய்யப்பட்டு, அந்நிறுவனத்தின் சாா்பாக ஜொ்மன் நாட்டில் பணிபுரிய ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ. 2.50 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை வருவாய் ஈட்ட, வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். கூடுதல் விவரங்கள் தேவைப்படுவோா், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மூன்றாவது தளத்தில் உள்ள தாட்கோ மேலாளரை அணுகலாம் என்று குறிப்பிட்டுள்ளாா்.