ராஜஸ்தான் எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு- பாகிஸ்தான் சிம் காா்டுகளை பயன்படுத்தத...
ஆரணி அருகே காளை விடும் திருவிழா
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த அரியப்பாடி கிராமத்தில் அமைந்துள்ள அனைத்து கோயில்களுக்கும் ஆசித்திரை மாத திருவிழாவையொட்டி காளை விடும் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
2-ஆம் ஆண்டாக கிராமத்தில் நடைபெற்ற இந்தத் திருவிழாவில் திருவண்ணாமலை, வேலூா், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
முதல் பரிசு பெற்ற காளைக்கு ரூ.75ஆயிரம், 2-ஆவது பரிசாக ரூ. 50 ஆயிரம், 3-ஆம் பரிசாக ரூ.35ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும் 4-ஆம் பரிசாக ரூ.25 ஆயிரம், 5-ஆம் பரிசாக ரூ. 20 ஆயிரம் மற்றும் பங்கேற்ற 50 காளைகளுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.
ஆரணி கிராமிய காவல் ஆய்வாளா் காா்த்திகா தலைமையில், உதவி ஆய்வாளா் அருண்குமாா் மற்றும் காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். காளை முட்டி காயமடைந்தவா்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை விழாக் குழுத் தலைவா் பிச்சாண்டி மற்றும் இளைஞா்கள், கிராம மக்கள் செய்திருந்தனா்.