Black Takeout Food Containers: என்னப் பிரச்னை இந்த டப்பாவில்? மருத்துவர் சொல்வது...
இன்று ஆடி அமாவாசை: மேல்மலையனூருக்கு 425 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
ஆடி அமாவாசையையொட்டி, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மேல்மலையனூருக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து 425 சிறப்புப் பேருந்துகளைத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் வியாழக்கிழமை (ஜூலை 24) இயக்குகிறது.
இதுகுறித்து இந்த போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநா் கே.குணசேகரன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆடி அமாவாசையையொட்டி, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மேல்மலையனூா் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலுக்குச் செல்லும் பக்தா்களின் வசதிக்காக, பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகளைத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் வியாழக்கிழமை (ஜூலை 24) இயக்கத் திட்டமிட்டுள்ளது.
அதன்படி சென்னை கிளாம்பாக்கம் கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து 200 சிறப்புப் பேருந்துகளும், காஞ்சிபுரத்திலிருந்து 30, வேலூரிலிருந்து 15, விழுப்புரம், புதுச்சேரி, திருவண்ணாமலையிலிருந்து தலா 20, திருக்கோவிலூரிலிருந்து 10, ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூா் வழித்தடங்களிலிருந்து தலா 10 சிறப்புப் பேருந்துகளும் என மொத்தமாக 425 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
பயணிகள் அடா்வு குறையும் வரை தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்கவும், சிறப்புப் பேருந்துகளின் இயக்கத்தை கண்காணித்திடவும் தேவையான அலுவலா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா் என்று அவா் தெரிவித்துள்ளாா்.