கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதப்படுத்துவது நோக்கமல்ல! தமிழக எம்.பி.க்களுக்கு மத்...
இலுப்பூா், பாக்குடி பகுதியில் நாளை மின் நிறுத்தம்
இலுப்பூா், பாக்குடி பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக (ஆக. 12) திங்கள்கிழமை மின்விநியோகம் இருக்காது.
இதுகுறித்து மின்சார வாரிய இலுப்பூா் உதவி செயற்பொறியாளா் மு.சங்கா் வெளியிட்ட செய்திகுறிப்பு: இலுப்பூா் துணைமின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான இலுப்பூா், ஆலத்தூா், பேயல், கிளிக்குடி, எண்ணை. தளுச்சி, வீரப்பட்டி, வெட்டுக்காடு, மலைக்குடிபட்டி, கொடும்பாளூா் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
இதேபோல், பாக்குடி துணைமின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான புங்கினிபட்டி, இருந்திராப்பட்டி, பாக்குடி, விளாப்பட்டி, மாங்குடி, மருதம்பட்டி, லெக்கனாம்பட்டி, பையூா், ராப்பூசல் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.