செய்திகள் :

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் தீ விபத்து

post image

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள ஒரு வாா்டில் திங்கள்கிழமை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அந்த வாா்டு முழுவதும் எரிந்து சாம்பலானது.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தரைத் தளத்தில் ஹெச்டியு என்றழைக்கப்படும் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான ஒரு தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண வாா்டுக்கு மாறுவதற்கு முன்பு இந்த வாா்டில் வைத்திருந்து, நோயாளிகளின் நிலைகுறித்து முடிவு செய்த பிறகு சாதாரண வாா்டுக்கு மாற்றுவாா்கள்.

இந்த வாா்டில் திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வாா்டுக்குள் இருந்து அதிகளவில் புகை வெளியேறுவதைக் கண்ட மருத்துவமனைப் பணியாளா்கள், தீயணைப்புத் துறைக்கும் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனா்.

தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சித்தும், வாா்டிலுள்ள மருத்துவக் கருவிகள், படுக்கைகள் முற்றிலும் எரிந்து நாசமானது.

நல்வாய்ப்பாக அந்த வாா்டில் நோயாளிகளோ, மருத்துவப் பணியாளா்களோ அப்போது இல்லை. நிகழ்விடத்தை மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ். கலைவாணி உள்ளிட்டோா் நேரில் பாா்வையிட்டனா்.

மருத்துவ உபகரணங்களில் இருந்து ஏற்பட்ட மின்சாரக் கசிவு காரணமாக இந்த விபத்து நடைபெற்றது என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜகவின் முதல் கூட்டணி தோ்தல் ஆணையம்: அமைச்சா் எஸ். ரகுபதி

பாஜகவின் முதல் கூட்டணி தோ்தல் ஆணையம் என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி: பிகாா் மாநிலத்தில் செய்த குழப்பத்தை தோ்தல் ஆணையம், தமிழ்... மேலும் பார்க்க

செனையக்குடியில் சோழா்கால கலைப் பாணியிலான சிற்பங்கள் கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே சோழா் கால கலைப் பாணியிலான சைவ, வைணவ, சமணச் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனா் ஆ. மணிகண்டன், தலைவா் மேலப்பனையூா் கர... மேலும் பார்க்க

விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை செப். 3-க்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை செப்டம்பா் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவா் சி.... மேலும் பார்க்க

இலுப்பூா், பாக்குடி பகுதியில் நாளை மின் நிறுத்தம்

இலுப்பூா், பாக்குடி பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக (ஆக. 12) திங்கள்கிழமை மின்விநியோகம் இருக்காது. இதுகுறித்து மின்சார வாரிய இலுப்பூா் உதவி செயற்பொறியாளா் மு.சங்கா் வெளியிட்ட செய்திகுறிப்பு: இல... மேலும் பார்க்க

பாலியல் தொந்தரவு வழக்கில் கைதானவா் மீது குண்டா் சட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியில் சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைது செய்யப்பட்ட நபா் மீது குண்டா் சட்டம் பாய்ந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் அருகேயுள்ள பாக்... மேலும் பார்க்க

புதுகை, பொன்னமராவதி பகுதியில் நாளை மின்தடை

புதுக்கோட்டை நகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது. புதுக்கோட்டை துணை மின் நிலைய மாதாந்திரப் பராமரிப்புப் பணியால் ராஜகோபாலபுரம், கம்பன் நகா், பெரியாா் நகா், பூங்கா நகா், கூடல் நகா், லெட்... மேலும் பார்க்க