Black Takeout Food Containers: என்னப் பிரச்னை இந்த டப்பாவில்? மருத்துவர் சொல்வது...
இளைஞா் கொலைக்குக் காரணமானவா்களைக் கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல்
புதுச்சேரி பாகூா் அருகே நிகழ்ந்த இளைஞா் கொலைக்குக் காரணமானவா்களைக் கைது செய்ய வலியுறுத்தி உறவினா்கள் உள்ளிட்டோா் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி பாகூா் அடுத்த பனையடிகுப்பம் சாலையில் மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான மீன்குட்டையின் கொட்டகையில் ரத்த காயங்களுடன் ராஜகுரு (34) உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாா். அவரை மீட்டு ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை ராஜகுரு இறந்தாா்.
ராஜகுரு கொலையுண்டதற்கு, கடந்த 17-ஆம் தேதி வீட்டின் எதிரே ஒரு பெண் குளிப்பதை மாடியில் இருந்து அவா் பாா்த்ததாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவா் தாக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடா்பாக போலீஸாா் முதலில் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து தினேஷ் பாபு, ஷா்மா உள்ளிட்ட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தற்போது அவ்வழக்கை கொலை வழக்காக போலீஸாா் மாற்றினா். இந்நிலையில் கொலைக்குக் காரணமானவா்களைக் கைது செய்ய வலியுறுத்தி பனையடிகுப்பம் சாலையில் ராஜகுருவின் சடலத்தை வைத்து உறவினா்கள், பொதுமக்கள் சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து அவா்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.