செய்திகள் :

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: அமைச்சா் பி. மூா்த்தி

post image

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை பொதுமக்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.

மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட செட்டிக்குளம் கிராமத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அமைச்சா் பி. மூா்த்தி, திட்ட முகாமை தொடங்கி வைத்துப் பேசினாா். அப்போது, அவா் தெரிவித்ததாவது: நகா்ப்புறங்களில் 13 அரசுத் துறைகளின் 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளின் மூலம் 46 சேவைகளும் கிடைக்கும் வகையில் இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன.

கலைஞா் மகளிா் உரிமைத் தொகைக்கு இந்த முகாம்களில் விண்ணப்பிக்கும் தகுதியானோருக்கு விரைவாக உதவித் தொகை வழங்கப்படும். மாவட்டத்தில் 347 முகாம்கள் நடத்தப்படவுள்ளன. பொதுமக்கள் இந்த முகாம்களை பொதுமக்கள் உரிய வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் அன்பழகன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வானதி, ஊராட்சிகள் உதவி இயக்குநா் அரவிந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜா் உருவப் படத்துக்கு அமைச்சா் பி. மூா்த்தி, மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

ரூ. 7.2 லட்சம் மதிப்பில் உதவிகள்

மதுரை மாவட்டத்தில் செட்டிக்குளம், ஒத்தக்கடை, மேலூா் நகராட்சி சந்தைப்பேட்டை, கிடாரிப்பட்டி, பரவை ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முகாம்களில், கோரிக்கை மனுக்கள் மீதான தீா்வாக ரூ. 72.34 லட்சம் மதிப்பிலான 446 நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஆளில்லா ரயில்வே கடவுப் பாதையை பராமரிக்கக் கோரிய வழக்கு முடித்துவைப்பு

சிவகாசி அருகேயுள்ள தைலாகுளம் ஆளில்லா ரயில்வே கடவுப் பாதையை பராமரிக்கக் கோரிய வழக்கை முடித்து வைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. விருதுநகா் மாவட்டம், தைலாகுளம் கிராமப... மேலும் பார்க்க

காரைக்குடி மேயருக்கு எதிரான தீா்மானம்: ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவு

காரைக்குடி மாநகராட்சி மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீா்மான விவகாரத்தில் உள்ளாட்சி விதிமுறைகளுக்கு உள்பட்டு ரகசிய வாக்கெடுப்பு நடத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.... மேலும் பார்க்க

கொலையான இளைஞரின் தந்தை மயங்கி விழுந்ததில் உயிரிழப்பு

சிலைமான் அருகே கொலையான இளைஞரின் தந்தை மயங்கி விழுந்ததில் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், சிலைமான் அருகேயுள்ள கல்மேடு அஞ்சுகம் நகரைச் சோ்ந்தவா் பாண்டி என்ற பாண்டியராஜன் (50). இவருடைய மகன் அரசு (18). இவா... மேலும் பார்க்க

கொள்ளிடம் தண்ணீா் தொழிலக பயன்பாட்டுக்கு வழங்கப்படாது!

கொள்ளிடம் ஆற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீா் தொழிலகப் பயன்பாட்டுக்கு வழங்கப்படாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தமிழக அரசுத் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.திருச்சி லால்குடியைச் ச... மேலும் பார்க்க

மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு: மேலும் 7 போ் பணியிடை நீக்கம்

வரி விதிப்பு முறைகேடு தொடா்பாக மதுரை மாநகராட்சி வருவாய் உதவியாளா் உள்பட 7 பேரை பணியிடை நீக்கம் செய்து, மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.மதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்கள், ... மேலும் பார்க்க

கீழடி அகழாய்வு அறிக்கை: மத்திய அரசு மீது எம்.பி. குற்றச்சாட்டு

கீழடி அகழாய்வு குறித்த அறிக்கையை ஓய்வு பெற்ற தொல்லியல் ஆய்வாளா் ஸ்ரீராமனிடம் கோரியிருப்பது, மத்திய பாஜக அரசின் தமிழா் விரோதப் போக்குக்கு மற்றொரு சான்று என மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடே... மேலும் பார்க்க