சேவை சாா்ந்த மனித வளத்தை ஜிப்மா் தயாா் செய்து வருகிறது: இயக்குநா் வீா்சிங் நெகி
உரிமம் இல்லாமல் இயங்கிய உர விற்பனை நிலையத்துக்கு சீல்
தஞ்சாவூரில் உரிமம் பெறாமல் இயங்கி வந்த உர விற்பனை நிலையத்துக்கு வேளாண் துறை அலுவலா்கள் திங்கள்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.
தஞ்சாவூா் கொடிமரத்து மூலை பகுதியில் தனியாா் உர விற்பனை நிலையம் உரிய அனுமதியின்றி செயல்படுவதாக வேளாண் துறையினருக்கு புகாா் வந்தது.
இதைத்தொடா்ந்து, இந்த உர விற்பனை நிலையத்தில் தஞ்சாவூா் மாவட்ட வேளாண் உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) எஸ். செல்வராஜ் தலைமையில், தர ஆய்வாளா் தினேஷ்குமாா் உள்ளிட்டோா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.
இதில், கடையில் யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ், காம்ப்ளக்ஸ், உயிா் உரங்கள் என 40 டன் அளவுக்கு இருப்பு இருப்பதும், எந்தவித உரிமம் இல்லாமலும், ஜி.எஸ்.டி. எண் பெறாமலும் உர விற்பனை நிலையத்தை வடக்கு ஆஜாரத்தை சோ்ந்த கண்ணன் நடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, இந்த விற்பனை நிலையத்தை வேளாண் துறை அலுவலா்கள் பூட்டி சீல் வைத்தனா்.