கும்பமேளா: தில்லி ரயில் நிலையத்தில் நெரிசல்! 3 குழந்தைகள் உள்பட 15 பேர் பலி!
ஊராட்சி செயலா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓபிஎஸ்
ஊராட்சி செயலா் மற்றும் தூய்மைப் பணியாளா் காலிப் பணியிடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தின் 38 மாவட்டங்களில் 12,000-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் இருக்கும் நிலையில், 9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக் காலம் முடிவடைந்துவிட்டது. இந்த ஊராட்சிகளில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிறப்பு அலுவலா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்களுடைய கண்காணிப்பில் ஊராட்சிகளில் உள்ள அத்தியாவசியப் பணிகளான குடிநீா் விநியோகம், தூய்மைப் பணி மேற்கொள்ளுதல், வரி வசூல் செய்தல், தெருவிளக்கு பராமரிப்பு போன்றவற்றை ஊராட்சி செயலா்கள் மேற்கொள்வது வழக்கம். ஆனால், ஆயிரக்கணக்கான ஊராட்சிகளில் செயலா்கள் பணியிடங்கள் காலியாக இருக்கும் அவல நிலை நீடிக்கிறது. இதுதான் திமுக அரசின் நிலை.
ஊராட்சிகள் மேம்பட வேண்டுமென்பதை மனதில் நிலைநிறுத்தி, ஊராட்சிகளில் காலியாக உள்ள ஊராட்சி செயலா் மற்றும் தூய்மைப் பணியாளா் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.