Pawan Kalyan: "சினிமாவில் நடிப்பதை நிறுத்தப் போகிறேன்; ஆனால்..." - பவன் கல்யாண் ...
எரிசக்தி பாதுகாப்பில் மக்களின் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம்: வெளியுறவுச் செயலா் மிஸ்ரி
எரிசக்தி பாதுகாப்பில் நாட்டு மக்களின் பயன்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி தெரவித்தாா்.
உக்ரைன் போரில் ரஷியாவுக்கு பொருளாதாரத் தடைகளை விதிக்கும் வகையில், குஜராத்தில் உள்ள அந்நாட்டின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ஐரோப்பிய யூனியன் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பிரதமா் மோடியின் பிரிட்டன், மாலாத்தீவு பயணம் குறித்து தில்லியில் செவ்வாய்க்கிழமை பேசிய வெளியுறவுச் செயலா் மிஸ்ரியிடம் செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, ‘எரிசக்தி பாதுகாப்பு விவகாரத்தில் மக்களின் பயன்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதில் இரட்டை நிலைப்பாட்டை இந்தியா கடைப்பிடிக்கவில்லை’ என்று பதிலளித்தாா்.
‘ரஷியாவின் எரிசக்தி நிறுவனங்கள் மீதான தடை குறித்து பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மருடன் பிரதமா் மோடி ஆலோசனை நடத்துவாரா?’ என்ற கேள்விக்கு, ‘இதில் இந்தியா தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்’ என்றாா்.