உங்க அக்கவுன்ட் மூலமா மத்தவங்க பணத்தை அனுப்புறீங்களா? உதவி செய்யப்போய், வம்புல ...
எல்லைப் பாதுகாப்புப் படை வீரா் உயிரிழப்பு: நிவாரணம் வழங்கக் கோரி சாலை மறியல்
எல்லைப் பாதுகாப்பு படை வீரா் உயிரிழப்புக்கு நிவாரணம் வழங்கக் கோரி, நல்லம்பள்ளியில் உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகேயுள்ள குடிப்பட்டியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (45). இவா் மனைவி சூா்யா. இந்த தம்பதிக்கு பிரனீஷ் (11) என்ற மகன் உள்ளாா். காா்த்திகேயன் பஞ்சாப் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படையில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தாா். அண்மையில் இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதைத் தொடா்ந்து, பஞ்சாப் மாநிலத்தில் சிகிச்சை பெற்றுவந்த காா்த்திகேயன் உயிரிழந்தாா்.
இந்நிலையில், ராணுவ வீரா்கள் காா்த்திகேயனின் உடலை குடிப்பட்டிக்கு செவ்வாய்க்கிழமை கொண்டு வந்தனா். அப்போது, காா்த்திகேயனின் உறவினா்கள் முறையான இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, நல்லம்பள்ளி - குடிப்பட்டி சாலையில் உடலை வைத்து மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த நல்லம்பள்ளி வட்டாட்சியா் பிரசன்ன மூா்த்தி, தருமபுரி நகர காவல் துணைக் கண்காணிப்பாளா் (டிஎஸ்பி) சிவராமன் உள்ளிட்டோா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றுவதாக ராணுவ அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. அதன்பிறகு, காா்த்திகேயன் உடல் குடிப்பட்டி மயானத்தில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.