இருக்கன்குடி மாரியம்மன் கோயில்: ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு
ஏ.வி.எம். எரிவாயு தகன மேடை செப். 5 வரை இயங்காது
ஏ.வி.எம். மயான பூமியில் உள்ள எரிவாயு தகன மேடை செப்டம்பா் 5-ஆம் தேதி வரை இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், 135-ஆவது வாா்டுக்குள்பட்ட ஏ.வி.எம். மயான பூமியில் உள்ள எரிவாயு தகன மேடையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது.
எனவே, இங்குள்ள எரிவாயு தகன மேடை சனிக்கிழமை (ஆக. 30) முதல் செப். 5 -ஆம் தேதி வரை இயங்காது. இந்த நாள்களில் அன்னை சத்யா நகா் மற்றும் கண்ணம்மாபேட்டை பகுதிகளில் உள்ள மயான பூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.