சாம்பியனானது பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன்: நடப்பு சீசனில் 5-ஆவது கோப்பை
ஒட்டன்சத்திரத்தில் விஷம் குடித்த தந்தை, மகள்
ஒட்டன்சத்திரத்தில் குடும்பப் பிரச்னை காரணமாக தந்தை, மகள் விஷம் குடித்தனா். இதில் தந்தை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் திடீா் நகா் பகுதியைச் சோ்ந்த லாரி ஒட்டுநா் செல்லப்பாண்டி (40). இவரது மனைவி சுபா. மகள் ஹீமதி (16), மகன் லோகேஷ் (13).
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனைவி சுபா உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தாா்.
இதையடுத்து, ஹீமதி, லோகேஷ் ஆகிய இருவரும் கோவையில் உள்ள உறவினா் வீட்டில் தங்கிப் படித்து வந்தனா்.
இந்த நிலையில், செல்லப்பாண்டி கோவைக்குச் சென்று மகள், மகனை கோயிலுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ஒட்டன்சத்திரத்துக்கு அழைத்து வந்தாா். புதன்கிழமை கோயிலுக்குச் சென்று விட்டு வீட்டுக்கு வந்த செல்லப்பாண்டி மகள், மகன் ஆகிய இருவருக்கும் பாலில் விஷம் கலந்து கொடுத்து விட்டு, தானும் அருந்தினாா். இதில் ஹீமதி மட்டும் பாலைக் குடித்தாா். லோகேஷ் பாலைத் தட்டி விட்டு ஒடிவிட்டராம். இந்த நிலையில், செல்லப்பாண்டி சம்பவ இடத்திலேயே
உயிரிழந்தாா். மகள் ஹீமதி ஒட்டன்சத்திரம் தனியாா் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.