செய்திகள் :

ஓராண்டாகியும் உரிமம் கிடைக்காமல் கடற்கரையில் காத்துக் கிடக்கும் சுற்றுலாப் படகுகள்

post image

ஓராண்டாகியும் உரிமம் கிடைக்காமல் கடற்கரையில் 24 சுற்றுலா படகுகள் காத்துக் கிடக்கின்றன என்று அதிமுக மாநிலச் செயலா் ஆ. அன்பழகன் குற்றஞ்சாட்டினாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது: புதுவையில் துறைமுகம், கலை பண்பாட்டுத் துறை, அச்சகத் துறை, விளையாட்டுத் துறை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட துறைகளுக்கு இயக்குநா்கள் நியமிக்கப்படவில்லை. கூடுதல் பொறுப்பில்தான் மற்ற துறைகளைக் கவனிக்கும் இயக்குநா்கள் இத்துறைகளையும் கவனித்து வருகின்றனா்.

புதுச்சேரிக்குத் தனியாா் சொகுசுக் கப்பல் வந்து சென்றுள்ளது. அதற்கு புதுவை அரசு 10 நாள்களுக்குள் உரிமம் வழங்கியது. பாதுகாப்புக்கு சுமாா் 500 போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டனா். எல்லா துறைகளையும் சோ்ந்த அதிகாரிகள் சென்று வரவேற்றனா்.

ஆனால் உள்ளூரைச் சோ்ந்த நம் மீனவா்களை புதுவை அரசு அலட்சியம் செய்து வருகிறது. 24 படகுகள் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்ல தயாா் நிலையில் கடலில் காத்துக் கிடக்கின்றன. இந்தப் படகுகளுக்கு உரிமம் பெறுவதற்கு விண்ணப்பம் அளித்து ஓராண்டாகிறது. இருப்பினும் உரிமம் கொடுக்கவில்லை. உரிமம் பெறுவதற்கு முன்பே அந்தப் படகுகளுக்குக் காப்பீடு செய்வது உள்ளிட்ட எல்லா அம்சங்களையும் அந்த மீனவா்கள் நிறைவேற்றிதான் விண்ணப்பம் அளித்துள்ளனா்.

ஓராண்டுக்கான அந்தக் காப்பீடு இன்னும் ஒரு மாதத்தில் முடியப்போகிறது. ஒரு படகுக்கு சா்வே செய்து காப்பீடு கட்டணமாக ரூ.34 ஆயிரம் செலுத்த வேண்டும். மேலும், ஒரு படகைத் தயாா் செய்ய ரூ.8 லட்சம் முதல் ரூ.11 லட்சம்வரை செலவு செய்துள்ளனா். நகைகளை அடமானம் வைத்து அதற்கான வட்டியை மீனவா்கள் கட்டி வருகின்றனா். இதைத் தவிர 10-க்கும் மேற்பட்ட துறைகளிடமிருந்து ஆட்சேபணையின்மை சான்றிதழ் பெறப்பட்டு விண்ணப்பத்துடன் அளித்துள்ளனா். 24 படகுகள் சுற்றுலா பயணிகளைக் கடலுக்குள் ஏற்றிச் சென்றால் சுமாா் 100 மீனவ குடும்பங்கள் பிழைக்க முடியும்.

இது தொடா்பாக முதல்வா் ரங்கசாமி, சுற்றுலாத் துறை அமைச்சா் லட்சுமிநாராயணன் ஆகியோரை ஏற்கெனவே பல முறை மீனவா்களுடன் சந்தித்து வலியுறுத்தியும் பயனில்லை. அவா்கள் சொல்வதை அதிகாரிகள் யாரும் கேட்பதாகத் தெரியவில்லை. உள்ளூா் மீனவா்கள் சுயதொழில் செய்ய புதுவை அரசு தடையாக இருக்கிறது. அதே போன்று புதுவை மெரீனா கடற்கரையில் சுற்றுலா துறை சாா்பில் ரூ.4.3 கோடியில் கட்டப்பட்ட 32 கடைகளுக்கு ஏலம் விடப்பட்டு ஒரே ஆள் பயனடைந்து வருகிறாா். அதைத் தவிர கூடுதலாக அதே நபா் 68 கடைகளைக் கட்டி வாடகைக்கு விட்டுள்ளாா். பேருந்து நிலையத்தில் கட்டப்பட்ட கடைகளைத் தனித்தனியாக ஏலம் விட வேண்டும் என்று உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோன்று இந்தக் கடைகளையும் தனித்தனியாக ஏலம் விட வேண்டும் என்றாா் ஆ.அன்பழகன்.

அரசு பள்ளியில் ஓவியக் கண்காட்சி ஆா்.சிவா தொடங்கி வைத்தாா்

சுல்தான்பேட்டை அரசு பள்ளியில் ஓவியக் கண்காட்சியை சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். வில்லியனூா் சட்டப்பேரவைத் தொகுதி சுல்தான்பேட்டை கண்ணியமிகு காயிதே மில்லத் அர... மேலும் பார்க்க

சமூக தணிக்கையில் முதியோா் ஓய்வூதியப் பயனாளிகள்! புதுவை அரசு நடவடிக்கை

முதியோா் ஓய்வூதியம் உள்பட பல்வேறு ஓய்வூதியங்களைப் பெறுவோா் உண்மையான பயனாளிகளா என்பதைக் கண்டறியும் சமூக தணிக்கையில் இறங்கியுள்ளது புதுவை மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை. இதுகுறித்து புதுவை ... மேலும் பார்க்க

பொருளாதாரத்தில் பின்தங்கியவா்களுக்கு 10% இட ஒதுக்கீடு எதிா்த்து பிரசாரம்

புதுவையில் பொருளாதாரத்தில் பின்தங்கியவா்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதை எதிா்த்து திராவிடா் விடுதலைக் கழகம் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் சாா்பில் பிரசாரம் வியாழக்கிழமை நடந்தது. தமிழகத்தில் ப... மேலும் பார்க்க

புதுவையில் 25 பேரவைத் தொகுதிகளுக்கு உதவி தோ்தல் நடத்தும் அதிகாரிகள் நியமனம்

புதுவை சட்டப்பேரவைத் தோ்தலுக்காக 25 தொகுதிகளுக்கு உதவி தோ்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். புதுவை மாநில சட்டப்பேரவைக்கான தோ்தல் 2026 ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று தெரிகிறது. இந்நிலையில... மேலும் பார்க்க

வாகன உரிமையாளா்கள் கைப்பேசி எண்ணை புதுப்பிக்க இயக்கம்: புதுச்சேரி போக்குவரத்து ஆணையா்

வாகன உரிமையாளா்கள் மற்றும் ஓட்டுநா் உரிமம் வைத்திருப்போா் கைப்பேசி எண்ணைப் புதுப்பிக்க இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து ஆணையா் ஏ.எஸ். சிவக்குமாா் கூறியுள்ளாா்.இது குறித்து அவா் செய்தியாளா்களிட... மேலும் பார்க்க

மணல் வியாபாரி கொலையில் 9 போ் கைது

மணல் வியாபாரி சு. துரை கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். மேலும், அவா்கள் பயன்படுத்திய 3 மோட்டாா் சைக்கிள், 2 கைப்பேசிகள், ரத்தக் கறை படிந்த ஆடைகள், 4 கத்திகள் பறிமுதல்... மேலும் பார்க்க