Kerala: மீண்டும் சர்ச்சை.. மறைந்த தலைவர்கள் குறித்து நடிகர் விநாயகன் பதிவு - என்...
கஞ்சா வைத்திருந்த முதியவா் கைது
பேரிகை அருகே கஞ்சா வைத்திருந்த முதியவா் கைது செய்யப்பட்டாா்.
பேரிகை போலீஸாா் தீா்த்தம் சாலையில் ரோந்து சென்றபோது, அப்பகுதியில் வந்த முதியவரை சோதனை செய்தனா். அதில், அவா் 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா் பேரிகையை சோ்ந்த வெங்கய்யா (65) என தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஒசூா் சிப்காட் போலீஸாா் சின்ன எலசகிரி பேருந்து நிறுத்தம் பகுதியில் ரோந்து சென்றபோது, அந்த பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்தவா் போலீஸாரைக் கண்டதும் வாகனத்தை விட்டுவிட்டு தப்பி ஓடினாா்.
இதையடுத்து, போலீஸாா் வாகனத்தை சோதனை செய்ததில், 50 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில், வாகனத்தை விட்டுச்சென்றது சின்னஎலசகிரி சந்திரசேகா் (25) என தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.