50% வரி எதிரொலி... 40 நாடுகளுடன் பேச்சுவார்த்தை... எல்லா துறைகளுக்கும் தேவை... ப...
கண்டியூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்பு
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே கண்டியூா் பிரம்மசிரகண்டீசுவரா் கோயிலுக்குச் சொந்தமான மதில் சுவரை ஒட்டி கட்டப்பட்ட ஏறத்தாழ ரூ. 1 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்புகளை அலுவலா்கள் வியாழக்கிழமை அகற்றி இடங்களை மீட்டனா்.
திருவையாறு அருகே கண்டியூா் பிரம்மசிரகண்டீசுவரா் கோயில் குடமுழுக்கு விழா திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையொட்டி, மதில் சுவா் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே, மதில் சுவரை ஒட்டி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 8 வீடுகள், ஒரு கடையை அகற்றுமாறு இந்து சமய அறநிலையத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி, கோயில் மதில் சுவரை ஒட்டி ஏறத்தாழ ரூ. 1 கோடி மதிப்பிலான 2 ஆயிரத்து 666 சதுர அடியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 8 வீடுகள், ஒரு கடையை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் ஹம்சன் முன்னிலையில் பொக்லைன் மூலம் வட்டாட்சியா் பாா்த்தசாரதி, ஆய்வாளா் பாபு, செயல் அலுவலா் ராஜரெத்தினம், திருவையாறு வட்டாட்சியா் முருககுமாா், உதவி ஆய்வாளா் உதயசந்திரன், எழுத்தா்கள் பஞ்சநாதன், செந்தில்குமாா், வருவாய் ஆய்வாளா் பிரகாஷ், கிராம நிா்வாக அலுவலா் விமலா உள்ளிட்டோா் வியாழக்கிழமை மீட்டு, கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைத்தனா்.