செய்திகள் :

கவின் ஆணவப் படுகொலை: 'ஒன்றிய அரசுக்காக தமிழ்நாடு அரசு காத்திருக்காமல்.!' - திருமாவின் கோரிக்கைகள்

post image

திருநெல்வேலியில் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று சென்னை சைதாப்பேட்டையில் விசிகவினர் ஆர்பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்பாட்டத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார்.

சிறப்பு புலனாய்வு விசாரணை

இந்த ஆர்பாட்டத்தில் திருமாவளவன், "கவின் வழக்கு விசாரணையைச் சிறப்பு புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும்.

கவின்
கவின்

இந்தக் குழு உயர் நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் அமைக்கப்பட வேண்டும்.

இந்த வழக்கில் இரண்டு காவல்துறையினர் சம்பந்தப்பட்டிருக்கின்றனர். அதனால், போலீஸ் மற்றும் சி.பி.சி.ஐ.டி விசாரணை நம்பகத்தன்மை அளிக்காது.

அதனடிப்படையில் தான், இந்தக் கோரிக்கையை நாங்கள் வைக்கிறோம்.

இது எங்களது முதல் கோரிக்கை.

தனிச்சட்டம் வேண்டும்

ஆணவக் கொலைக்கு தனிச்சட்டத்தை ஒன்றிய அரசு தான் இயற்ற வேண்டும். ஆனால், இந்தச் சட்டத்தை மாநில அரசும் இயற்றுவதற்கான வாய்ப்பு இருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும்.

'ஒன்றிய அரசு இந்தச் சட்டத்தை இயற்றட்டும்' என்று இருக்காமல், தமிழ்நாடு அரசு இந்தச் சட்டத்தை இயற்றி பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியான அரசாக இருக்கட்டும்.

இது எங்களுடைய இரண்டாவது கோரிக்கை.

விடுதலை கட்சிகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து மனு கொடுத்தோம்" என்று பேசினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

"எம்.ஜி.ஆரை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை!" - தொல்.திருமாவளவன் விளக்கம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,"தம... மேலும் பார்க்க

பாமக பொதுக்குழு முதல் விசிக ஆர்ப்பாட்டம் வரை - 09.08.2025 முக்கியச் செய்திகள்!

Pஆகஸ்ட் 9 முக்கியச் செய்திகள்தேனி பங்களாமேடு பகுதியில் 14 வயது சிறுவன் பராமரிப்பு பணிக்காக சென்ற ரயில் என்ஜின் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சல்மான் கானை தொடர்பு கொண்டதற்கா... மேலும் பார்க்க

"எம்.ஜி.ஆர் குறித்து பேசுவதற்கு திருமாவளவனுக்கு தகுதி இல்லை" - எடப்பாடி பழனிசாமி காட்டம்

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "எம்ஜிஆர் குறித்து பேசுவதற்கு திருமாவளவனுக்கு தகுதி இல்லை. எம்ஜிஆர் தமிழ்நாட்டு மக்களுக்கு தெய்வமானவர். அப்படிப்பட்டவரை விமர்... மேலும் பார்க்க

'பக்கம் எண் 44, வாக்குறுதி எண் 285' - திமுகவின் வாக்குறுதியும் பொய் பேசிய சேகர் பாபுவும்?

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே தூய்மைப் பணியாளர்கள் 9 வது நாளாக போராடி வருகின்றனர். தங்கள் மண்டலங்களை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது என்பது பணி நிரந்தரமுமே அவர்களின் கோரிக்கை. போராட்டக்குழுவுடன் ப... மேலும் பார்க்க

கமல் ஹாசன்: "தேவையற்ற பொதுத் தேர்வுகள், அநீதியான நுழைவுத் தேர்வுகள்" - முதலமைச்சரை பாராட்டிய கமல்!

பள்ளிக் கல்விக்கான தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025-ஐ முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், "இந்தக் கல்விக்கொள்கை, சமத்துவத்தையும் சமூகநீதியையும் சேர்த்தே போதிக்கிற... மேலும் பார்க்க

"3, 5, 8ம் வகுப்பு பிள்ளைகளுக்கு தேர்வு வைப்பதை ஒருபோதும் ஏற்க மாட்டோம்" - சீமான் பேச்சு!

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழ்நாடு அரசு, மாநில கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு பல தரப்பிலிருந்து ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியிருக்கிற... மேலும் பார்க்க