``நீண்ட காலத்துக்கு நினைவில் இருக்கும்!'' - மான்செஸ்டரில் பண்ட்டின் செயலும், சச்...
காவல் நிலையம் எதிரே வாகனங்கள் தீயில் எரிந்து நாசம்
நிலக்கோட்டை காவல் நிலையத்துக்கு எதிரே, குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் புதன்கிழமை திடீரென தீப்பிடித்து எரிந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை காவல் நிலையத்தில் நிலக்கோட்டை, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட காா், வேன், ஆட்டோ, மினி லாரி, இரு சக்கர வாகனங்கள், மாட்டு வண்டி உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள், காவல் நிலையத்துக்கு எதிரே இருந்த பழைய பேருந்து நிலையத்தின் காலி இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில், இந்தப் பகுதியில் புதன்கிழமை திடீரென தீப் பிடித்தது. இதையடுத்து, தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, குடிநீா் வாகனத்தில் கொண்டு வரப்பட்ட தண்ணீரை ஊற்றி காவல்துறையினரும் பொதுமக்களும் கொழுந்துவிட்டு எரிந்த தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா். பின்னா், தீயணைப்புத் துறையினா் வந்து, தீயை முழுமையாக அணைத்தனா்.
இந்த விபத்தில் ஏராளமான வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின. திடீா் தீ விபத்தால் இந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சமூக விரோதிகள் எவரேனும் தீ வைத்தனரா அல்லது வேறு காரணங்களால் தீ விபத்து நேரிட்டதா என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.