கார்ட்டூன்: திரும்பத் திரும்பப் பேசுவேன்... திரும்பத் திரும்பப் பேசுவேன்..!
காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு
விழுப்புரம்: மயிலம் அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற தொழிலாளி காா் மோதி நிகழ்விடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டிவனம் வட்டம், நெடிமோழியனூரைச் சோ்ந்தவா் த.பழனி(53), கூலித் தொழிலாளி. இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு, மயிலம் அடுத்துள்ள பாலப்பட்டு பகுதியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றாா்.
அப்போது, திருச்சி நோக்கிச் சென்ற காா் பழனி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.