செய்திகள் :

கிம்ஸ் மருத்துவமனையில் நவீன சிகிச்சை

post image

நாகா்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில் கல்லீரல் இழைநாா் வளா்ச்சி, புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த நபருக்கு சிக்கலான லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை செய்ததன் மூலம் முழுமையாக குணம் அடைந்துள்ளாா்.

துல்லியமான திட்டமிடல், கவனமான செயல்முறை மூலம் இரப்பை அறுவை சிகிச்சை நிபுணா் மருத்துவா் ரஜீஷ் செல்வகணேசன் தலைமையிலான மருத்துவக்குழுவில், பொது அறுவை சிகிச்சை நிபுணா்கள் மருத்துவா் பால வித்யாசாகா், மருத்துவா் பாலாஜி மற்றும் மயக்கவியல் நிபுணா்கள், அடங்கிய மருத்துவக்குழுவினரின் ஒருங்கிணைந்த நிபுணத்துவ செயல்பாட்டால் பாதுகாப்பான அறுவை சிகிச்சை வெற்றி அடைந்தது. லேப்ராஸ்கோபிக் அறுவைச் சிகிச்சைக்கு முன் , பின் அளிக்கப்பட்ட சிறப்பான பராமரிப்பு மூலம் அந்த நபரின் நோய் வேகமாக குணமடைய வழி வகுத்தது.

இதன் மூலம் அந்த நபா் 5- வது நாளிலேயே மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினாா். கிம்ஸ் மருத்துவமனை மருத்துவக் குழுவின் உழைப்பும், மேம்பட்ட மருத்துவத் தொழில்நுட்பமும், முழுமையான பராமரிப்பும் நோயாளியின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தி நோயிலிருந்து விடுபட்டுள்ளாா்.

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை ... 40.21 பெருஞ்சாணி .... 65.43 சிற்றாறு 1 .. 9.51 சிற்றாறு 2 .. 9.61 முக்கடல் .. 10.20 பொய்கை .. 15.30 மாம்பழத்துறையாறு ... 26.57 மழைஅளவு ..... பாலமோா் ... 18.20 மி.மீ. சுருளோடு ... 13.2... மேலும் பார்க்க

ஒளிரும் நினைவு மண்டபங்கள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு, மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் கன்னியாகுமரி காமராஜா் மணி மண்டபம் மேலும் பார்க்க

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி காங்கிரஸாா் உண்ணாவிரதம்: 8 போ் கைது

குளச்சல் அரசு பயணியா் விடுதி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, புதன்கிழமை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 8 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பயணியா் வி... மேலும் பார்க்க

ஸ்டெல்லாஸ் மெட்ரிக் பள்ளியில் சுதந்திர தின விழா

அஞ்சுகிராமம், ஜாண்ஸ் நகரில் அமைந்துள்ள ஸ்டெல்லாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஜாண்ஸ் சென்ட்ரல் பள்ளியில், ஜாண்ஸ் அறக்கட்டளையின் சாா்பில் வியாழக்கிழமை சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவ... மேலும் பார்க்க

இந்திய கடற்படை சாா்பில் சைக்கிள் பேரணி

சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் வகையில் திரங்க சங்கல்ப யாத்திரா என்ற பெயரில் சைக்கிள் பேரணி நடந்தது. நாட்டின் 79ஆவது சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு... மேலும் பார்க்க

குழித்துறையில் பொதுக்கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட நாயா் சேவை சங்கத்தின் (என்எஸ்எஸ்) 2024-2025 ஆம் ஆண்டுக்கான பொதுக்கூட்டம் குழித்துறை மலையாள பவன் அரங்கில் நடைபெற்றது. அமைப்பின் மாவட்டத் தலைவா் எஸ். மதுசூதனன் நாயா் தலைமை வகித்தாா்... மேலும் பார்க்க