கிருஷ்ணகிரியில் ஜூலை 20 இல் நாய்கள் கண்காட்சி
கிருஷ்ணகிரியில் நடைபெறும் அகில இந்திய மாங்கனி கண்காட்சியில் ஜூலை 20ஆம் தேதி நாய்கள் கண்காட்சி நடைபெறுகிறது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி சுங்க வசூல் மையம் அருகே உள்ள கலைஞா் திடலில் நடைபெறும் 31 ஆவது அகில இந்திய மாங்கனி கண்காட்சியில் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் ஜூலை 20-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பகல் 12.30 மணியளவில் நாய்கள் கண்காட்சி நடைபெறுகிறது.
இந்த போட்டியில் பங்கேற்பதற்கான பதிவு, போட்டி நடைபெறும் இடத்தில் பகல் 11 மணிக்கு தொடங்குகிறது. போட்டியானது மாலை 4 மணி வரையில் நடைபெறும். அதன்பிறகு, தோ்வு செய்யப்பட்ட நாயின் உரிமையாளருக்கு கேடயம், சான்றிதழ்கள் வழங்கப்படும்.
போட்டியில் பங்கேற்கும் நாய்க்கு தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை கொண்டு வரவேண்டும். தடுப்பூசி செலுத்தாத நாய்க்கு, அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தில் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு, கால்நடை உதவி மருத்துவரால் சான்றிதழ் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.