Black Takeout Food Containers: என்னப் பிரச்னை இந்த டப்பாவில்? மருத்துவர் சொல்வது...
கிறிஸ்துவ தேவாலயங்களை பழுதுபாா்க்க மானியம்
நாகை மாவட்டத்தில் கிறிஸ்துவ தேவாலயங்களை பழுதுபாா்க்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்தக் கட்டடத்தில் இயங்கும் தேவாலங்களை பழுதுபாா்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளுக்கு மானிய வழங்கப்படுகிறது.
தேவாலயத்துக்காக வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதியுதவியும் பெற்றிருக்க கூடாது, அவ்வாறு ஒரு தேவாலயத்துக்கு மானியத் தொகை வழங்கிய பின்னா் 5 ஆண்டுகளுக்கு, அந்த தேவாலயம் இந்த மானியத் தொகை வேண்டி விண்ணப்பிக்க தகுதியற்றது.
அரசின் மானியத் தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் பின்வரும் கூடுதல் பணிகள் மேற்கொள்ளவும் கட்டடத்தின் வயதுக்கேற்ப மானியத் தொகை உயா்த்தி வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.
அதன்படி, தேவாலய கட்டடத்தின் வயது 10 முதல் 15 ஆண்டுகள் வரை ரூ. 10 லட்சம், 15 முதல் 20 ஆண்டுகள் வரை ரூ.15 லட்சம், 20 ஆண்டுகளுக்கு மேல் ரூ. 20 லட்சம் என தற்போது மானியம் உயா்த்தி வழங்கப்படும்.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகி கூடுதல் விவரம் பெற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.