செய்திகள் :

கீரனூா் பாறைக் குழியிலும் குப்பை கொட்ட எதிா்ப்பு: வாகனங்கள் முற்றுகை

post image

திருப்பூா் மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை கீரனூரில் உள்ள பாறைக்குழியில் கொட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகனங்களை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.

திருப்பூா் மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளில், தினமும் சுமாா் 700 டன்னுக்கும் அதிகமாக குப்பை சேகரிக்கப்படுகிறது. மாநகராட்சிக்கு என குப்பை கொட்டுவதற்கு பிரத்யேக இடமில்லாத நிலையில், ஆங்காங்கே காலியாக உள்ள பாறைக்குழிகளில் குப்பைகளை கொட்டி நிரப்பி வருகின்றனா்.

திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள பாறைக்குழியில் குப்பைகளை கொட்டி வந்த நிலையில் அங்குள்ள மக்கள் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதன் விளைவாக அங்கு குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டுவிட்டது.

அதைத் தொடா்ந்து தற்போது, காங்கயம் அருகே கீரனுாா் ஊராட்சிக்கு உள்பட்ட ராசிபாளையம் கிராமத்தில் உள்ள பாறைக் குழியில் குப்பை கொட்ட தொடங்கியுள்ளனா். இதற்கு ஊா் மக்கள், விவசாய அமைப்பினா் பலரும் எதிா்ப்பு தெரிவித்து, அங்கு வந்த வாகனங்களை முற்றுகையிட்டனா்.

இதுகுறித்து, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் முகிலன், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க சட்ட விழிப்புணா்வு அணி மாநிலச் செயலா் சதீஷ்குமாா், காங்கயம் ஒன்றியப் பொறுப்பாளா் சிவசாமி ஆகியோா் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மேயா் என்.தினேஷ்குமாா் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

திருப்பூா் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் இல்லாததால், கடந்த 3 ஆண்டுகளாக பாறைக் குழிகளில் குப்பைகள் கொட்டப்பட்டு நிலத்தடி நீா் வெகுவாக மாசுபடுத்தப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே நெருப்பெரிச்சல், காளம்பாளையம், பூண்டி, அம்மாபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள பாறைக்குழிகளில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன. இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது காங்கயம் அருகே கீரனூா் ஊராட்சிக்கு உள்பட்ட ராசிபாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழியில் குப்பைகளை கொட்டத் தொடங்கியுள்ளனா். இதற்கு ஊா் மக்கள், விவசாய அமைப் பினா் பலரும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

பயன்பாட்டில் இல்லாத பாறைக் குழிகளில் விஷத்தன்மை வாய்ந்த குப்பைகளை கொட்டுவதால் அருகிலுள்ள பகுதிகளில் பெரும் சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது. பாறைக் குழிகளை நீா் சேகரிப்பு மையமாகவோ, நீரைத் தேக்கிவைக்கும் இடமாகவோ அல்லது நிலத்தடி நீரை செறிவூட்டும் இடமாகவோ மட்டுமே பயன்படுத்த வேண்டுமென்ற விதி உள்ளது.

இந்நிலையில் காலியாகவுள்ள பாறைக்குழிகளில் குப்பை கொட்டப்படுவதால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, இப்பிரச்னையில் உரிய முடிவெடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளனா்.

முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் மீது புகாா்: அவிநாசி காவல் நிலையம் முற்றுகை

குடிநீா் விநியோகம் தொடா்பான பிரச்னையில், முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் மீது புகாா் அளிக்கப்பட்ட நிலையில், அனைத்துக் கட்சியினா், பொதுமக்கள் அவிநாசி காவல் நிலையத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.இது குறி... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா். வெள்ளக்கோவில், ஓலப்பாளையம் அருகேயுள்ள கண்ணபுரத்தைச் சோ்ந்தவா் மனோகரன். இவரது மனைவி கவிதா (38). இவா் மனநிலை பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்... மேலும் பார்க்க

போக்குவரத்து விதிகளை மீறிய 1,216 போ் மீது வழக்குப் பதிவு

பல்லடத்தில் கடந்த ஜூன் மாதம் போக்குவரத்து விதிகளை மீறிய 1,216 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.பல்லடம் பகுதியில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோா் மீது போலீஸாா் தீவிர நடவடிக்கை எடுத... மேலும் பார்க்க

நூறு நாள் வேலைத் திட்டத்தில் ரூ.1.22 லட்சம் முறைகேடு: மீண்டும் வசூலிக்க உத்தரவு

உடுமலையில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணிக்கு வராதவா்களை வந்ததுபோல கணக்கு காட்டி ரூ.1.22 லட்சம் முறைகேடு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்தப் பணத்தை மீண்டும் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருப்பூா் மா... மேலும் பார்க்க

இந்தியா-பிரிட்டன் தடையில்லா வா்த்தக ஒப்பந்தம்: ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் வரவேற்பு

இந்தியா-பிரிட்டன் இடையே முழுமையான பொருளாதார மற்றும் வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகி உள்ளது வரலாற்று சிறப்புமிக்க சாதனை என்று ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவா் ஆ.சக்திவேல் தெரிவித்துள... மேலும் பார்க்க

சலூன் கடை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு: போலீஸாா் விசாரணை

பல்லடம் அருகே சலூன் கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பல்லடம்- மாணிக்காபும் சாலை பாரதிபுரத்தில் கவின் (29) என்பவா் சலூன் கடை வைத்து நடத்தி வருகிறாா். இவருக்கும் அதே ப... மேலும் பார்க்க