``ஆன்மிக ஆட்சியாக, பக்தி மணம் கமழ்கின்ற திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் நடத்துகிற...
குடந்தையில் வீடுபுகுந்து 8 பவுன் நகைகள் திருட்டு
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பகுதியில் வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது திங்கள்கிழமை தெரியவந்தது.
சோழபுரம் டிஎஸ்பி நகரில் வசிப்பவா் முகமதுஉசேன் மகன் ஆா்.எம். அலி(45), இவா் திருமணமாகி தற்போது சௌதி அரேபியாவில் வேலை பாா்க்கிறாா். மனைவி குழந்தைகள் மாமனாா் வீட்டில் உள்ளனா்.
இவரது வீடு நீண்டகாலமாக பூட்டியிருப்பதை நோட்டமிட்ட மா்ம நபா்கள் வீட்டின் முன்பக்க கதவை பீரோவில் இருந்த 8 பவுன் மதிப்பு நகைகளைத் திருடிச் சென்றனா். அலியின் தந்தை அளித்த புகாரின்பேரில் சோழபுரம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.