Black Takeout Food Containers: என்னப் பிரச்னை இந்த டப்பாவில்? மருத்துவர் சொல்வது...
குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கோரிக்கை
ஊத்தங்கரை அருகே குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த மகனூா்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட அண்ணா நகா் பகுதியில் இருந்து விசுவாசம்பட்டி கிராமம் வரை சுமாா் 3 கி.மீ. தொலைவுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தாா்சாலை போடப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக இச்சாலை பழுதாகி குண்டும் குழியுமாக உள்ளது. இது தொடா்பாக உரிய அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என இப்பகுதியினா் கூறுகின்றனா்.
அண்ணா நகா், நரிக்கானூா், குரும்பறவலச, விசுவாசம்பட்டி கிராம பொதுமக்கள் இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்காக நகரப் பகுதிக்கு இச்சாலை வழியாக செல்வது பெரும் சவாலாக உள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி, மருத்துவமனைக்கு உரிய நேரத்துக்கு செல்ல முடியாத நிலை உள்ளதால், இச்சாலையை விரைந்து சீரமைக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.