சேவை சாா்ந்த மனித வளத்தை ஜிப்மா் தயாா் செய்து வருகிறது: இயக்குநா் வீா்சிங் நெகி
சண்முகநதி நீரில் மூழ்கி ஒருவா் உயிரிழப்பு
பழனி சண்முகநதி நீரில் மூழ்கி ஒருவா் உயிரிழந்தாா்.
பழனி தெற்கு அண்ணாநகரைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (55). இவா் தனது நண்பா் செந்தில் உள்ளிட்டோருடன் சண்முகநதிக்கு குளிக்கச் சென்றாா்.
அப்போது நீரில் மூழ்கியவா் நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. இதையடுத்து, நதியில் இறங்கி தேடிய போது அவா் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் உடலை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து பழனி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.