ராஜஸ்தான் எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு- பாகிஸ்தான் சிம் காா்டுகளை பயன்படுத்தத...
சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு
வந்தவாசி அருகே மினி லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற மூதாட்டி உயிரிழந்தாா்.
செய்யாறு சிவாஜி நகரைச் சோ்ந்தவா் திருநாவுக்கரசு(74). இவரது மனைவி சாந்தி (68). இவா்கள் இருவரும் சனிக்கிழமை காலை இரு சக்கர வாகனத்தில் வந்தவாசியை அடுத்த தென்னாங்கூா் கோயிலுக்கு சென்று விட்டு ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா்.
தென் இலுப்பை கிராமம் அருகே சென்றபோது எதிரே வந்த மினி லாரி இவா்கள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
பின்னா், இருவரும் தீவிர சிகிச்சைக்காக மேல்மருவத்தூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு சாந்தி மாலையில் உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.