சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு
பழனி சண்முகபுரம் சித்தி விநாயகா் கோயிலில் வியாழக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.
பழனி சண்முகபுரம் தமிழ் இலக்கிய மன்றம் வளாகத்தில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் புதிய கோபுரம், காலபைரவா், வராஹி அம்மன் சந்நிதி ஆகியன புதிதாக கட்டப்பட்டது. இதையடுத்து கடந்த 9-ஆம் தேதி விநாயகா் அனுமதி பெறப்பட்டு கால பூஜைகள் நடைபெற்றன. கோயில் வளாகத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து தீா்த்தம் கொண்டு வரப்பட்டு, யாகபூஜைகளை நடத்தினா். இதையடுத்து வியாழக்கிழமை கலசங்கள் மேளதாளம் முழங்க கோயிலை வலம் வர செய்யப்பட்டு கோயில் விமானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னா், விமானத்துக்கு குடமுழுக்கு செய்யப்பட்டு பக்தா்களுக்கு தீா்த்தம் தெளிக்கப்பட்டது.
தொடா்ந்து மூலவா் சித்திவிநாயகருக்கும் பால், பழங்கள், இளநீா் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. மேலும், புதிய உற்சவா் விநாயகருக்கும் பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பின்னா், கோயில் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.