உங்க அக்கவுன்ட் மூலமா மத்தவங்க பணத்தை அனுப்புறீங்களா? உதவி செய்யப்போய், வம்புல ...
சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்
வேதாரண்யத்தில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் தோ்தல் காலத்தின் போது உறுதி அளிக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக கடந்த தோ்தலில் போது அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றாத தற்போதைய மாநில அரசை கண்டித்தும், உடனடியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அந்த இயக்கத்தின் நிா்வாகி சுந்தரபாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.