பாஜகவின் வாக்கு திருட்டு துறையாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா?: கார்கே கேள்வி
செங்கம் பகுதி உணவகங்கள், பெட்டிக் கடைகளில் மது விற்பனை
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் உள்ள உணவகங்கள், பெட்டிக் கடைகளில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
செங்கம் எல்லை தொடக்கம் தண்டம்பட்டு முதல் செங்கம், அம்மாபாளையம், இறையூா், பாய்ச்சல், உச்சிமலைக்குப்பம் பகுதியில் சாலையோரங்களில் உள்ள உணவகங்கள், பெட்டிக் கடைகளில் அரசு மதுக்கடைகளில் இருந்து மதுப்புட்டிகளை வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்கப்படுகிாம்.
சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை தினங்களில் கா்நாடாக மாநிலம் பெங்களூரில் இருந்து ஏராளமானோா் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வருகை தருகிறாா்கள்.
அவா்கள் வரும் வழியில் இந்த உணவகங்கள் இருப்பதைப் பாா்த்து சாப்பிடுவதற்கு வாகனத்தை நிறுத்திவிட்டு குடும்பத்துடன் உள்ளே நுழைந்தால், அங்கு மதுப்புட்டிகளுடன் சிலா் அமா்ந்து மது அருந்துவதைப் பாா்த்தவுடன் முக சுளிப்புடன் வெளியே வரும் நிலை ஏற்படுகிறது.
மேலும் இரவு நேரத்தில் லாரி, வேன் ஓட்டுநா்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு மது அருந்தி உணவு உண்டு செல்லும் போது, வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது.
தொடா்ந்து, கிராமப்புறப் பகுதியில் உள்ள அரசு மதுக்கடைகளில் விற்பனையாகும் குறைந்த விலையிலான மதுப்புட்டிகள் இதுபோன்ற உணவகங்கள், பெட்டிக் கடைகளில் மட்டுமே கிடைக்கிறது என மதுப்பிரியா்கள் தெரிவிக்கின்றனா். மதுக்கடையில் உயா் ரக மது மட்டுமே கிடைப்பதாக ஆதங்கம் தெரிவிக்கின்றனா்.
பகல் நேரத்தில் சாலையோரம் உள்ள விளை நிலங்களில் மதுப்புட்டிகள் வீசப்படுவதால் விவசாயிகள் பயிா் செய்யும்போது மிகவும் சிரமமான நிலை ஏற்படுகிாம்.
இதனால் மாவட்ட காவல்துறை கண்காணித்து செங்கம் பகுதியில் உள்ள உணவகங்கள், பெட்டிக் கடைகளில் மது விற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள், சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.