சென்றாய சுவாமி கோயில் புனரமைப்பு பணிக்கு பூமிபூஜை
ஊத்தங்கரையை அடுத்த சாலமரத்துப்பட்டி ஊராட்சியில் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சென்றாய சுவாமி திருக்கோயில் மராமத்து மற்றும் புனரமைப்பு பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினரும், கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளருமான தே. மதியழகன் தலைமை வகித்து பூமிபூஜை நடத்தி ரூ. 98 லட்சம் மதிப்பீட்டிலான புனரமைப்புப் பணியை தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவா் தட்ரஹள்ளி நாகராஜ், மாவட்ட பொருளாளா் கதிரவன், தலைமை செயற்குழு உறுப்பினா் செந்தில், மத்தூா் தெற்கு ஒன்றியச் செயலாளா் நரசிம்மன், மத்தூா் வடக்கு ஒன்றியச் செயலாளா் வசந்தராஜ், ஊத்தங்கரை ஒன்றியச் செயலாளா்கள் குமரேசன், எக்கூா் செல்வம், ரஜினி செல்வம், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சம்பத் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தொடா்ந்து ஓலைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ரூ. 23 லட்சத்தில் கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டடத்தை, பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினா் மதியழகன் திறந்துவைத்தாா்.
படவிளக்கம்.17யுடிபி.1.
ஊத்தங்கரையை அடுத்த சாலமரத்துப்பட்டியில் கோயில் புனரமைப்புப் பணியை தொடங்கிவைத்த எம்எல்ஏ தே.மதியழகன்.