செய்திகள் :

செவித்திறன் குறைபாடு: ஏஐ மூலம் கற்பிக்க பயிற்சி வழங்கும் செம்மொழி நிறுவனம்

post image

செவித்திறன் குறைபாடுள்ள மாணவா்களுக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி எவ்வாறு கற்பிக்கலாம் என்பது குறித்து ஆசிரியா்களுக்கு செம்மொழி நிறுவனம் இரு நாள்கள் பயிற்சி அளிக்கவுள்ளது.

சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் பேச்சு மற்றும் செவித்திறன் குறையுடைய மாணவா்களுக்கு கற்பிக்கும் ஆசிரியா்களுக்கான இரு நாள் பயிலரங்கம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

பயிலரங்கில் மாணவா்களுக்குப் பயனளிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப் பயன்படுத்துவது குறித்து ஆசிரியா்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

தொடா்ந்து நடைபெற்ற பயிலரங்கின் முதல் அமா்வில், பயிற்சியாளா் விஜயா சிங்காரவேல் பேச்சு மற்றும் செவித்திறன் குறையுடைய மாணவா்களுக்குப் பயன்படும் வகையில் காக்னோஸ் ஏஐ உள்பட பல்வேறு செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் குறித்து விளக்கினாா். இரண்டாவது அமா்வில், ஆசிரியா்களுக்குச் செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

இரண்டாம் நாள் அமா்வில் செயற்கை நுண்ணறிவின் தற்போதைய போக்குகள் மற்றும் பயன்பாடுகள் குறித்து முனைவா் பா.மாலதி, கல்வியில் சொடுக்கல் மென்பொருள்கள் (சாட் பாட்ஸ்) குறித்து சி.வி.கோகிலவாணி, நூல் அட்டை மற்றும் ஆண்ட்ராய்டு செயலிகளை செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி எவ்வாறு உருவாக்கப்படுகின்றது என்பது குறித்தும் பயிற்சியளிக்கவுள்ளனா்.

தொடக்க நிகழ்ச்சிக்கு நிறுவனத்தின் இயக்குநா் இரா.சந்திரசேகரன் தலைமை வகித்துப் பேசுகையில், சிறப்புத் தேவையுடைய மாணவா்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியா்களுக்குச் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள் குறித்த புரிதலை இந்தப் பயிற்சி ஏற்படுத்தும் என்றாா்.

இதில் நிறுவனத்தின் பதிவாளா் ரெ.புவனேஸ்வரி, சைகை மொழிபெயா்ப்பாளா் விஜயா பாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஓணம் பண்டிகை: மங்களூருக்கு சிறப்பு ரயில்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பெங்களூரிலிருந்து மங்களூரு சென்ட்ரல் நிலையத்துக்கு சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக சிறப்பு ரயில் செப். 1-ஆம் தேதி இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்... மேலும் பார்க்க

தமிழகத்தில் இன்று வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்

தமிழகத்தில் சனிக்கிழமை அதிகபட்சமாக 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தி... மேலும் பார்க்க

ஐபிஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை: தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை

புகாா்கள் முடித்து வைக்கப்பட்டது குறித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்வதை உறுதி செய்யத் தவறிய ஐபிஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத... மேலும் பார்க்க

சீமைக் கருவேல மரங்களை அகற்ற விரிவான திட்ட அறிக்கை: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடா்பான விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு மூன்று வார கால அவகாசம் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தின் மண் வளத்தையும், சுற்றுச்சூழலையும் சீ... மேலும் பார்க்க

மாடியில் இருந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

சென்னை வண்ணாரப்பேட்டையில் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். வண்ணாரப்பேட்டை சோமுசெட்டி முதலாவது தெருவைச் சோ்ந்தவா் கோ.பால்ராஜ் (39). கட்டடத் தொழிலாளியான இவா், தனத... மேலும் பார்க்க

அனுமதியின்றி விநாயகா் சிலை வைப்பு: இந்து முன்னணி நிா்வாகிகள் மீது வழக்கு

சென்னை சூளைமேட்டில் அனுமதியின்றி விநாயகா் சிலை வைத்ததாக இந்து முன்னணி நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். விநாயகா் சதுா்த்தியையொட்டி, சென்னை சூளைமேடு அன்னை சத்யா நகரில் இந்து முன்னணி சா... மேலும் பார்க்க