செய்திகள் :

'சேகர் பாபு ஆப்சென்ட்; 45 நிமிட மீட்டிங்- இறங்கி வரும் அரசு?அடுத்தக்கட்டப் பேச்சுவார்த்தை அப்டேட்

post image

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 9 வது நாளை எட்டியிருக்கிறது. போராட்டக்குழுவுடன் அமைச்சர் சேகர் பாபு நேற்று நள்ளிரவில் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் இன்று மதியம் நான்காவது கட்டப் பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் ஒரு படி முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

நேற்றைய பேச்சுவார்த்தையின் போது அமைச்சர் சேகர் பாபு பேசிய ஒரு சில விஷயங்கள் போராட்டக் குழுவை அதிருப்தியில் ஆழ்த்தியது. இதனைத் தொடர்ந்து தாங்கள் அமைச்சருடன் பேச விரும்பவில்லை என போராட்டக் குழுவினர் இன்று காலையில் தெரிவித்திருந்தனர். இதனால் மாநகராட்சி ஆணையர் மற்றும் துணை ஆணையர் தலைமையில் நான்காவது கட்டப் பேச்சுவார்த்தை மதியம் 2 மணிக்கு தொடங்கியது.

கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் சென்ற இந்தப் பேச்சுவார்த்தையில் முக்கியமான சில விஷயங்கள் ஆலோசிக்கப்படிருக்கிறது.

சேகர் பாபு
சேகர் பாபு

மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் போராட்டக் குழுவிடம், 'நாங்கள் அந்த மண்டலங்களை தனியாருக்கு கொடுத்துவிட்டோம். அவர்களும் செலவு செய்து வேலையை தொடங்கிவிட்டார்கள். இப்போது ஒப்பந்தத்திலிருந்து பின் வாங்கினால் அவர்கள் கோர்ட்டு கேஸூ என போவார்களே? அதனால் கொஞ்சம் யோசித்து முடிவெடுங்களேன்.' என கோரிக்கை வைக்கும் தொனியில் கேட்டிருக்கிறார்.

இதற்கு பதிலாக போராட்டக்குழுவின் தரப்பில் அவர்களின் கோரிக்கைகளை இன்னும் வலுவாக எடுத்து வைத்திருக்கின்றனர். குறைந்தபட்சமாக பணி நிரந்தரம், அவுட் சோர்ஸிங் போன்ற பிரச்னைகளை நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்ளலாம். 31.07.25 அன்று எங்கள் ஊழியர்கள் என்ன நிலையில் இருந்தார்களோ அதே நிலையில் தொடர வேண்டும் எனவும் அதை எழுத்துப்பூர்வமாக உத்தரவாதமாக கொடுக்க வேண்டும் எனவும் போராட்டக் குழுவின் தரப்பில் கோர்ப்பட்டிருக்கிறது.

போராட்டக்குழு
போராட்டக்குழு

மாநகராட்சி ஆணையரும் அவர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாகவும் அமைச்சரிடம் பேசிவிட்டு அழைப்பதாகவும் கூறி நான்காம் கட்டப் பேச்சுவார்த்தையை முடித்து வைத்திருக்கிறார்.

போராட்டக் குழுவினர், இதுவரை அவர்களின் நிலையிலிருந்து இறங்கி வராமல் இருந்தார்கள். இப்போது எங்களிடம் கோரிக்கை வைக்கும் தொனியில் பேசுகின்றனர். இதை ஒரு படி முன்னேற்றமாகவே கருதுகிறோம் என கூறுகின்றனர்.

அதிகாரிகள் அமைச்சர்களுடன் கூடி பேசிவிட்டு அடுத்தக்கட்டப் பேச்சுவார்த்தைக்கு போராட்டக் குழுவை இன்று மாலை அழைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

"எம்.ஜி.ஆரை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை!" - தொல்.திருமாவளவன் விளக்கம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,"தம... மேலும் பார்க்க

பாமக பொதுக்குழு முதல் விசிக ஆர்ப்பாட்டம் வரை - 09.08.2025 முக்கியச் செய்திகள்!

Pஆகஸ்ட் 9 முக்கியச் செய்திகள்தேனி பங்களாமேடு பகுதியில் 14 வயது சிறுவன் பராமரிப்பு பணிக்காக சென்ற ரயில் என்ஜின் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சல்மான் கானை தொடர்பு கொண்டதற்கா... மேலும் பார்க்க

"எம்.ஜி.ஆர் குறித்து பேசுவதற்கு திருமாவளவனுக்கு தகுதி இல்லை" - எடப்பாடி பழனிசாமி காட்டம்

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "எம்ஜிஆர் குறித்து பேசுவதற்கு திருமாவளவனுக்கு தகுதி இல்லை. எம்ஜிஆர் தமிழ்நாட்டு மக்களுக்கு தெய்வமானவர். அப்படிப்பட்டவரை விமர்... மேலும் பார்க்க

'பக்கம் எண் 44, வாக்குறுதி எண் 285' - திமுகவின் வாக்குறுதியும் பொய் பேசிய சேகர் பாபுவும்?

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே தூய்மைப் பணியாளர்கள் 9 வது நாளாக போராடி வருகின்றனர். தங்கள் மண்டலங்களை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது என்பது பணி நிரந்தரமுமே அவர்களின் கோரிக்கை. போராட்டக்குழுவுடன் ப... மேலும் பார்க்க

கமல் ஹாசன்: "தேவையற்ற பொதுத் தேர்வுகள், அநீதியான நுழைவுத் தேர்வுகள்" - முதலமைச்சரை பாராட்டிய கமல்!

பள்ளிக் கல்விக்கான தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025-ஐ முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், "இந்தக் கல்விக்கொள்கை, சமத்துவத்தையும் சமூகநீதியையும் சேர்த்தே போதிக்கிற... மேலும் பார்க்க

"3, 5, 8ம் வகுப்பு பிள்ளைகளுக்கு தேர்வு வைப்பதை ஒருபோதும் ஏற்க மாட்டோம்" - சீமான் பேச்சு!

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழ்நாடு அரசு, மாநில கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு பல தரப்பிலிருந்து ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியிருக்கிற... மேலும் பார்க்க