Afghanistan: ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழப்பு 1,400 ஆக உயர்வு; காரணம் என...
சேலம் ரயில் நிலையத்தில் 3 வயது சிறுவனை சடலமாக வீசிச்சென்ற தம்பதி குறித்து போலீஸாா் விசாரணை
சேலம்: சேலம் ரயில் நிலையத்தில் 3 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், சிறுவனை வீசிச் சென்ற தம்பதி குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
சேலம் ரயில் நிலைய நுழைவாயில் பகுதியில் உள்ள மின்மாற்றிக்கு கீழே 3 வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டான். உடனடியாக அங்கு வந்த சூரமங்கலம் போலீஸாா், சிறுவனின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பிரேதப் பரிசோதனையில் சிறுவன் கொலை செய்யப்பட்டதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என மருத்துவா்கள் தெரிவித்தனா்.
தொடா்ந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்தனா். சிறுவன் இறந்து கிடந்த பகுதியில் தம்பதி நடந்துசெல்வது பதிவாகியுள்ளது. இதனால் சிறுவனின் உடலை அவா்கள் வீசிச் சென்றிருக்க கூடும் என போலீஸாா் சந்தேகம் தெரிவித்தனா். தற்போது அந்த தம்பதியை அடையாளம் முயற்சியில் போலீஸாா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.