Black Takeout Food Containers: என்னப் பிரச்னை இந்த டப்பாவில்? மருத்துவர் சொல்வது...
டேங்கா் லாரி மூலம் குடிநீா் விநியோகம்
வேதாரண்யம் அருகேயுள்ள சிறுதலைக்காடு மீனவ கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அங்கு டேங்கா் லாரி மூலம் குடிநீா் வழங்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
கடலோரப் பகுதியில் அமைந்துள்ள இந்த கிராமத்துக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் விநியோகம் கடந்த சில வாரங்களாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, கொள்ளிடம் குடிநீா் விநியோகம் சீராகும் வரை தற்காலிகமாக டேங்கா் லாரியில் குடிநீா் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.
முன்னாள் எம்பி பி. வி. ராஜேந்திரனின் முயற்சியில் மேற்கொண்ட இந்தப் பணியை ஊராட்சி முன்னாள் தலைவா் சத்யகலா செந்தில் தொடங்கிவைத்தாா்.